Tags

, , , , , , , ,

I apologize to my regular viewers for this post written in Tamil language. I am so sorry about this and It’s dedicated to my dearest Tamil friends.  Guys it’s for you..!!

காதல்…..!

ஆணும் பெண்ணுக்கும் இடையே வெறும் பாலினக் கவர்ச்சி மட்டுமே கிடையாது. அது அவர்கள் இருவருக்குமிடையேயான அன்பின் பகிர்தல்.

ஒரு ஆணும், பெண்ணும் நட்புகொள்ளத் தொடங்குகிறார்கள் எனில், ஒரு காரணி அவசியமாகிறது. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இருவரும் ஒரே மாதிரியான அபிப்ராயங்கள் கொண்டிருக்கத் தேவையில்லை. ஏதேனும் ஒரு வித்தியாசமாவது இருக்க வேண்டும். எப்படி இரு காந்தங்கள் இணைய வெவ்வேறு துருவங்கள் அவசியமோ அது போல!

dm1ஒருவர் மீது மற்றொருவர் காதல் கொள்ள அவசியமான காரணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், குறிப்பிட்ட துறையில் வல்லவராய் இருப்பவர்களை மற்றவர்கள் விரும்புகிறார்கள். அதாவது நாட்டியம், உள்ளிட்ட கலைகளிலே சிறப்பாக இருப்பது, விளையாட்டுகளில் சிறப்பாக இருப்பது, இன்னும் கொஞ்சம் சொன்னால், நன்றாக கல்வியில் ஆர்வம் கொண்டவர்களையும் விரும்புகிறார்கள். வேறு மாதிரியான காரணிகளும் உண்டு. உதாரணமாக, அவன் என் அப்பாவைப் போல் இருக்கிறான், அவள் என் அன்னையைப் போல் நன்றாக பேசுகிறாள், இவள்/இவன் என் வாழ்க்கைத் துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்றும்கூட நினைக்கிறார்கள்.

காதல் என்கிற ஒன்று துவங்குகையில் தனிநபர் பாதுகாப்பு என்கிற விஷயம் முக்கியமானதாகிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னோர் விஷயம், காதலிக்கத் துவங்குபவர்கள் மற்றவர்களிடம் நேர்மறையான விஷயங்களை எதிர்பார்க்கின்றனர். எதிர்மறையான விஷயங்களை கண்டுகொள்வதில்லை. அதேசமயம் இவ்வாறு நம்மிடம் நேர்மறையான விஷயங்களை எதிர்பார்க்கின்றனர் என அறிந்தவுடனே இன்னொருவர் தம்மிடம் உள்ள எதிர்மறை விஷயங்களை முடிந்தமட்டும் வெளிக்காட்டுவதே இல்லை!

பெண்கள் தினமும் ஆடை அலங்காரம், முடி அலங்காரம் முதலியவற்றை தினமும் மாற்றுவது, ஆண்கள் புதுப்புது பைக்-களில் வருவது, சில ஆண்களும் ஆடை  அலங்காரங்களில் பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது!

இதுவரை சொன்னது புற அம்சங்கள். இனி அக அமைப்புகள்!

அதாவது ஒருவரது பேச்சு, நடவடிக்கைகள் முதலானவற்றை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதாவது கற்பனையிலாவது நினைக்கத் துவங்குகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நமக்கு எப்படியிருந்தால் ஒருவரைப் பிடிக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியேதான் எதிர்பார்க்கிறோம் அவர் அப்படி நடக்காவிட்டாலும் கூட!

”முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பார்கள். அதன்படி பார்க்கப் போனால், குறிப்பிட்ட நபர் எப்படியிருந்தாலும், எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், அவரைப் பிடித்துப் போய்விடுகிறது. அதேதான் மேற்சொன்னதும் கூட!

காதலுக்குப் பிறகு…..

வாழ்க்கை என்று வந்தபிறகு…..

கணவன்-மனைவி என்கிற போது அவர்களுக்கு மற்றவர்கள் உதவி (உற்றவர்கள் உதவி!) ஏதாவதொரு சமயத்தில் தேவைப்படுகிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் சிலநேரம் தலையிட்டு பிரச்சினை முடிவுக்கு வருமல்லவா! சமுதாயத்தில் ஒருவன்/ஒருத்தி புதிதாக காதலிக்கத் துவங்குகையில், அவன்/அவள் சமுதாயத்தை விட்டு விலகுகிறார்கள். அல்லது சமுதாயம் அவர்களை வேறு கோணத்தில் பார்க்கிறது. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையாக இருக்க வேண்டும். எப்போது அந்த நம்பிக்கை தகர்கிறதோ, அப்போதே வாழ்க்கை நரகமாகிறது.

(புதிதாக)காதலித்து திருமணம் செய்தவர்களிடையே சந்தேகங்கள் வருவது இயல்பு. அது பல்வேறு கோணங்களில் வெளிப்படத் துவங்குகிறது. நாம் முன்னர் பார்த்த அந்த ஈர்க்கும் காரணிகள்தாம். இவன்/இவள் எப்படியெல்லாம் நம்மை ஈர்க்க வைத்தான்/ள்? அப்படியே பிற நபர்களிடமும் நடந்து கொண்டால்??

இப்படியான சந்தேகங்கள் உண்டாவது இயற்கையானது மட்டுமல்ல, உறுதியானதும் கூட!

காதலிக்கத் துவங்குகையில் ஒருவர் வெளிப்படுத்திய நேர்மறை விஷயங்களை மட்டுமே பார்க்கிறபோது, திருமணத்திற்குப் பிறகு எதிர்மறையான (உண்மையான!) குணங்கள் எல்லாரிடத்தும் வெளிப்படத் துவங்குகிறது. இது சாதாரணம்தான்! ஆரம்பத்தில் புறக்கணித்த எதிர்மறை குணங்கள் திருமணத்திற்குப் பின்தான் விஸ்வரூபம் எடுக்கின்றன. ஏனெனில் எல்லா நல்ல காதலர்களும், நல்ல கணவனாய் இருப்பதில்லை! (சிலர் விதிவிலக்காகலாம்!!)

காதலிக்கையில் கற்பனை வளம்பெறுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் அது சாத்தியமாகாது.  கல்யாணம் என்று ஆனபின் உழைப்பும் ஊதியமும் பிரதானப்படுகிறது.

இன்னோர்பக்கம் பெரும்பாலும் காதலிக்கையில் அடுத்தவருடைய நிறம், அழகு, கண், என ஏதாவதொன்றைப் பற்றி கவிதை எழுதி பாராட்டு பெறுவதுண்டு. கல்யாணம் ஆன பின் மற்றவர்களிடம் உள்ள பொடுகு, சிரங்கு உள்ளிட்ட இத்யாதிகள் நமக்கும் வந்துவிடுமோ என்று விலகிவிடுவதும் உண்டு. அதாவது கல்யாணத்திற்கு முன் நாம் ரசித்த அழகோ, அறிவோ கல்யாணத்திற்குப் பின் பிரதானப்படுவதில்லை.

சிலருக்கு அதிகபட்ச அன்பின் காரணமாகவோ, வேறு விஷயங்களினாலோ, மற்றொருவர் நம்முடனே இருக்க வேண்டும் ((அ) நமக்கு கீழே இருக்க வேண்டும்) என்று எண்ணுகிற போது அவரை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாய் உள்ளன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

காதலிக்கும் பிற தோழர்களுக்கு (சுய புரிதலுக்கு)எனது கேள்விகள்:

  1. காதலிக்கிறவர்கள் மட்டுமல்லாது பிற தோழர்கள்/தோழிகளிடமும் உங்களால் அதே அளவு நட்பைக் காட்ட முடியுமா?
  2. இந்த காதலினால், உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் வளர்ச்சி இருக்கிறதா?
  3. பொறாமை, சந்தேகங்கள், நம்பிக்கை இல்லாமை உள்ளிட்டவை உங்களுக்குள் வருமா?
  4. இருவருக்கிடையில் சண்டை/மோதல் நிகழ்கையில், யாரேனும் தோற்கிறபட்சத்தில் அந்த மோதல் முடிவுக்கு வருமா?
  5. காதல் சுபமாக கல்யாணத்தில் முடியாதபட்சத்தில், ஒருவருக்கொருவர் நீதான் காரணம் என சண்டையிடுவீர்களா? இல்லை, ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி பிரிந்துவிடுவீர்களா?

இந்த 5 கேள்விகளுக்குள்தான் (கேள்விகளின் விடைகளுக்குள்!) உங்கள் காதலின் தன்மை இருக்கிறது. சுய புரிதலுக்குப் பின் உங்கள் நடவடிக்கைகளைத் திருத்திக் கொள்ளுங்கள்.